சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி அம்பத்தூர் அத்திப்பட்டு கிருஷ்ணா சாலையில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு நந்தினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அம்பத்தூர் தொழில்பேட்டையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த நந்தினி நேற்று முன்தினம் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

வெளியே சென்று விட்டு மாலை நேரம் வீடு திரும்பிய பெற்றோர் நந்தினி தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நந்தினியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் நந்தினி எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் எல்லோரும் என்னுடைய இந்த முடிவை மன்னித்து விடுங்கள். நான் நிறைய தப்பு பண்ணிட்டேன்.

அம்மா, அப்பா உங்களையும் நிறைய அசிங்கப்படுத்தி விட்டேன். அதனால் உங்களது அன்பு எனக்கு கிடைக்கவில்லை. அன்பை நம்பி ஏமாந்து விட்டேன். அதிலிருந்து வெளியே வர படிக்கலாம் என்றால் அம்மாவுக்கும், வேலைக்கு செல்லலாம் என்றால் அப்பாவுக்கும் விருப்பமில்லை. வேலைக்கு சென்ற இடத்தில் இம்ரானை பார்த்தேன். அவரது அன்பு கிடைத்தது. அவனும் என்னை வேண்டாம் என கூறி விட்டான்.

இம்ரானின் அன்பு இல்லாமல் என்னால் வாழ முடியவில்லை. அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம். என் முடிவுக்கும் அவனுக்கும் சம்பந்தமில்லை. அவனின் அன்பு இல்லை. அம்மா அப்பாவிடம் இருந்து அன்பு, சுதந்திரம் கிடைக்கவில்லை. உங்கள் விருப்பம் போல் செத்து ஒழிகிறேன். எனது முடிவை இம்ரானுக்கு தெரியப்படுத்துங்கள். அவன் என் மீது வைத்துள்ள அன்பு எப்படி என்று புரியும். இப்படிக்கு நந்தினி இம்ரான் என அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.