சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, பார்ப்பவர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. நடுக்கடலில் திடீரென்று நீர்ப்பரப்பு ஒரு பெரிய மலை போல மேலெழும்பி, அடுத்த சில வினாடிகளில் ராட்சத அலையாக மாறி உடைந்து சிதறுகிறது. இது இயற்கையில் மிகவும் அரிதாக நிகழக்கூடிய “ரோக் வேவ்” (Rogue Wave) எனப்படும் ஆபத்தான அலையாகும். கடல் நீரோட்டங்களின் மோதலாலோ அல்லது கடுமையான காற்றாலோ உருவாகும் இவ்வகை அலைகள், சுமார் 100 அடி உயரத்திற்கும் மேலாக எழும்பி, அந்த வழியாக வரும் பெரிய கப்பல்களையே நிலைகுலையச் செய்யும் வல்லமை கொண்டவை.
When it comes to transportation, I’ll pick a plane over a ship every time the ocean is scary asf what is this ? 😳✈️ pic.twitter.com/YnCXgkTroG
— MR.MARFO‼️ (@iamMrMarfo1) January 3, 2026
இந்தக் காணொளியைப் பார்த்த பலரும், “கடல் இவ்வளவு பயங்கரமானதா?” என்று அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். வட அட்லாண்டிக் போன்ற கொந்தளிப்பான கடல் பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்தக் காட்சி, கடற்பயணத்தின் பின்னால் இருக்கும் பேராபத்தை நமக்கு உணர்த்துகிறது. விமானப் பயணம் எவ்வளவோ மேல் என்றும், இந்தக் கடலைப் பார்த்தாலே மரண பயம் ஏற்படுவதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் குவிந்து வருகின்றன.
