
பிரேசில் நாட்டில் உள்ள சாலையை மிகப்பெரிய ராட்சத மலைப்பாம்பு கடந்து சென்றது.
வனவிலங்குகளோ, மற்ற உயிரினங்களோ அவ்வபோது பொதுமக்கள் நடமாடும் இடங்களுக்கு வரும். சில சமயம் வழி தெரியாமல் கூட குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விடும். அந்த வகையில் பிரேசில் நாட்டில் ஒரு முக்கிய சாலை வழியாக வாகனங்கள் வந்து சென்றது. அப்போது திடீரென ராட்சத மலைப்பாம்பு ஒன்று தடுப்பு சுவரைத் தாண்டி சாலையை கடந்து சென்றது.
அந்த பாம்பு அங்கிருந்து நகரும் வரை வாகன ஓட்டிகள் வாகனங்களை சற்று தூரமாக நிறுத்திக் கொண்டனர். பின்னர் ராட்சத மலை பாம்பை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். அந்த பாம்பு சென்ற பிறகு வாகன ஓட்டிகள் புறப்பட்டு சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.