தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் மாதவன். காதல் திரைப்படத்தில் நடித்த சாக்லேட் பாயாக இருப்பவர். இவரின் கார் வீடு என அனைத்தும் சேர்த்தால் எவ்வளவு சொத்து மதிப்பு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இவர் இந்திய திரைப்பட நடிகர், எழுத்தாளர் மற்றும் பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் முதலில் இந்தி சினிமாவில் தான் அறிமுகமானார். சினிமாவிற்கு அறிமுகமாவதற்கு முன்பு இவர் பல இந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். அதன் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

இந்நிலையில் மாதவனின் சொத்து விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் மாதவனின் மொத்த சொத்து மதிப்பு 120 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு திரைப்படத்திற்கு 15 கோடி சம்பளம் வாங்கி வரும் இவரின் வீடு மட்டும் 18 கோடி. அவரிடம் இரண்டு கார்கள் உள்ளது.தில் Rover Sports கோடி ரூபாவிலும், Mercedes Benz GL350 இந்தக் காரின் விலை வெளியிடப்படவில்லை