
திருச்சி மாவட்டம் ஏர்போர்ட் வசந்தநகரை சேர்ந்த நாசர் அலிக்கு(30) சொந்தமாக கே.கே நகர் பகுதியில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இவருக்கும் திருமணமான பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 5 வயதில் மகன் உள்ளார்.
சம்பவம் நடைபெற்ற அன்று நாசர்லி தனது நண்பரான வேலுமணியுடன் இணைந்து அந்த பெண்ணின் 5 வயது மகனை திருவரும்பூர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் கட்டாயப்படுத்தி சிறுவனின் வாயில் மது ஊற்றி கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிறுவனை மீட்டு, வாலிபர்களை பிடிக்க முயற்சி செய்தனர். அதற்குள் இருவரும் தப்பி ஓடியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அந்த சிறுவனை திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நாசர் அலி, வேலுமணி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது