
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அம்பானியிடம் ரூ.400 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானாவைச் சேர்ந்த கணேஷ் ரமேஷ் வனபாரதி, அக்டோபர் 27 ஆம் தேதி அன்று 320 கோடியும், அதற்கு அடுத்த நாள் 200 கோடியும், கடைசியாக 3400 கோடியும் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், நவம்பர் 8 ஆம் தேதி வரை அவரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.