ரேஷன் கடையில் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வர உள்ள பண்டிகை காலத்தை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து உணவு பொருள்களையும் மானிய விலையில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 18ம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தியோதனா அன்ன யோஜனா சிறப்பு முன்னுரிமை அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ மாவு ரூபாய் 28-க்கும் சர்க்கரை 32 ரூபாய்க்கும் வழங்கப்படும். இதைத்தவிர இந்த அட்டைதாரர்களுக்கு 21 கிலோ அரிசி இலவசமாக ஒரு குடும்பத்திற்கு 13 கிலோ கோதுமை அல்லது கோதுமை மாவோடு ஒரு கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும். இந்த அறிவிப்பு ஆனது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.