நாடு முழுவதும் ரேஷன் கடைகளில்   மூலமாக ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நாடு முழுவதும் இந்த மாதம் வரிசையாக பண்டிகை நாட்கள் வர இருக்கிறது. இதனால் பல மாநில அரசுகள் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு பண்டிகை கால பரிசுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள இலவச ரேஷன் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என PM மோடி அறிவித்துள்ளார்.

அதோடு, இந்த திட்டத்தின் மூலம் 80 கோடி பேர் பயனடைவார்கள் என்றும் கூறினார். பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தை கொரோனா காலத்தில் (2020) மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு மாதம் 5 கிலோ அரிசி ரேஷனில் இலவசமாக வழங்கி வருகிறது.