அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள்(கரூர் குரூப்) பாட்டிலுக்கு 1 ரூபாய் தர வேண்டும். நீங்கள் பாட்டிலுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளுங்கள் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம், மீறினால் பணி இடை நீக்கம், பணி மாறுதல் என மிரட்டுகின்றனர். 500 டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று அறிவித்துவிட்டு F1-2 என்ற 500-க்கும் மேற்பட்ட கடைகளை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

இதன் காரணமாக டாஸ்மாக் ஊழியர் பாதிக்கப்பட்டாலும் அமைச்சர் செந்தில் பாலாஜி பயனடைவார். யார் ஊழலை கட்டுபடுத்த வேண்டுமோ அந்த அமைச்சர்கள், அதிகாரிகளே டாஸ்மார்க் பணியாளர்களை தவறுசெய்ய தூண்டுகின்றனர் என பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரூர் கம்பெனி கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை எனில் டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம், பணிமாற்றம் செய்யப்படுவர் என மிரட்டப்படுகின்றனர். ஊழலை கட்டுபடுத்த வேண்டிய அதிகாரிகள், அமைச்சர்கள் ஊழியர்களை தவறுசெய்ய தூண்டுகின்றனர் என தெரிவித்தார். இதனை BMS சங்கம் வன்மையாக கண்டிதத்துள்ளது.