அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் அல்பாரெட்டா என்ற பகுதி உள்ளது. இங்கு நடந்த ஒரு கார் விபத்தில் அமெரிக்க வாழ் இந்திய மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அதன்படி ஆரியன் ஜோஷி, ஷ்ரியா அவர்சாலா, அன்வி சர்மா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

அதன் பிறகு காரில் இருந்த ரித்வாக் சோமேபல்லி, முகமது லியாகத் ஆகியோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரை அதிவேகமாக ஓட்டியதுதான் விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.