தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா பேட்டி அளித்தார். அப்போது, தொழில்நுட்ப நிறுவனங்கள் மனிதர்களை இடம் மாற்றி செயற்கை நுண்ணறிவைக் கொண்டு வருவது குறித்து தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது AI- ஐ ஒரு மனிதனாக கருதக்கூடாது. அதனை ஒரு கருவியாக மட்டுமே கருத வேண்டும். நிறுவனங்கள் மனித பிணைப்புகளை மாற்ற வேண்டாம் என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும் செயற்கை நுண்ணறிவு என்ற சொல்லுக்கு பதிலாக வேறுபட்ட நுண்ணறிவு என்று அழைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அவர் தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்.