29 வயதான ஜெஸிகா பார்போசா  21 வயதான சாமுவேல் அல்விஸ் டோஸ் ரைஸ் கவால்கன்ட் என்ற தனது வளர்ப்பு மகனை சுட்டுக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
சாமுவேல் 14 வயதிலிருந்தே ஜெஸிகா மற்றும் அவரது கணவருடன் வசித்து வந்தார்.
மராபா, பிரேசில் என்ற இடத்தில் உள்ள குடும்ப வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் ஜெஸிகாவை சாமுவேலின் உடலுக்கு அருகில் கண்டனர்.

அவரது தலையின் பின்பகுதியில் துப்பாக்கியால் சுட்ட காயம் இருந்தது. முதலில், இது ஒரு விபத்து என்றும், சாமுவேல் துப்பாக்கியைக் கையாண்ட போது அது வெடித்து விட்டதாகவும் ஜெஸிகா போலீஸாரிடம் கூறினார். சாமுவேல் சிறந்த வாழ்க்கையைத் தேடி 14 வயதிலேயே பக்காஜ் என்ற இடத்தில் இருக்கும் தனது பெற்றோரின் வீட்டை விட்டு மராபாவுக்கு குடிபெயர்ந்தார். ஜெஸிகாவின் கணவர் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று, உள்ளூர் மண்பாண்ட தயாரிப்பு கடையில் வேலை வாங்கிக் கொடுத்தார்.

ஆனால் வளர்த்தவருக்கே துரோகம் செய்யும் விதமாக அவரது மனைவி ஜெசிக்காவுடன் சாமுவேல் காதல் உறவு வைத்து வந்துள்ளார். பின்னாளில் இந்த உறவை முறித்துக் கொள்ள சாமுவேல் நினைத்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த ஜெசிக்கா அவரிடம் சண்டையிட்டுள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஜெஸிகா சாமுவேலை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்தனர்.