பிரேசில் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்தில் மட்டும் 51 லட்சத்திற்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன் பிறகு டெங்கு பாதிப்பால் இதுவரை 2899 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் நாட்டைத் தொடர்ந்து அண்டை நாடுகளிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.