நடிகர் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார்? அவருக்கு எப்போது முதல்வர் ஆசை வந்தது? என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் அனல் பறந்து வரும் நிலையில், இது குறித்து நடிகர் தாமு பகிர்ந்துள்ள சீக்ரெட் தகவல் ஒன்று தவெக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜய்யின் முதல் படமான ‘நாளைய தீர்ப்பு’ வெளியான காலத்திலேயே அவருக்கு முதல்வராக வேண்டும் என்ற லட்சியம் அடிமனதில் இருந்ததாக தாமு தெரிவித்துள்ளார். ஆரம்ப காலத்திலிருந்தே விஜய் சமூகப் பொறுப்புள்ள கருத்துக்களைப் பேசுவதோடு மட்டுமல்லாமல், பெண்களுக்குத் தேவையான அரிசி, சர்க்கரை மற்றும் மளிகைப் பொருட்களைத் தனது சொந்த செலவில் வழங்கி மக்கள் சேவையில் ஈடுபட்டு வந்ததை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

முதல்வர் நாற்காலியை அடைய வேண்டும் என்ற தீராத தாகம் இருந்ததால்தான், வெறும் ரசிகர் மன்றமாக இருந்த அமைப்பை ‘விஜய் மக்கள் இயக்கம்’ எனப் பெயர் மாற்றி, அதன் மூலம் திட்டமிட்டு மக்கள் பணிகளை விஜய் முன்னெடுத்து வந்ததாக தாமு கூறியுள்ளார்.
பொதுவாக நடிகர்கள் உச்சத்தை அடைந்த பிறகுதான் அரசியலைப் பற்றி சிந்திப்பார்கள், ஆனால் விஜய் தனது கேரியரின் ஆரம்பப் புள்ளியிலேயே அரசியலை நோக்கியே தனது காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. தாமுவின் இந்த அதிரடித் தகவல், “தளபதி 2026-ல் கோட்டையைப் பிடிப்பது உறுதி” என தவெக தொண்டர்களைக் கெத்தாகப் பேச வைத்துள்ளது.
