தேனி மாவட்டம் ஏத்தகோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி சிவசந்திரா(39). இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேல்முருகன் உயிரிழந்ததால் சிவசந்திரா கடமலைக்குண்டு மேலப்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

கருப்பையாவுக்கும் சிவசந்தராவுக்கும் 14 வயதில் மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்பையா தனது தங்கையின் இரண்டு பவுன் தங்க செயினை சிவசந்திராவிடம் கொடுத்து அடகு கடையில் அடமானம் வைத்துள்ளார்.

அந்த நகைக்கு கூடுதல் பணம் வேண்டி கருப்பையா சிவசந்திரா 17 வயது மகள் மூன்று பேரும் ஆண்டிப்பட்டிக்கு சென்றனர். அங்கு வைத்து கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த கருப்பையா தனது மனைவி மற்றும் மகளை சரமாரியாக தாக்கியுள்ளார்.

தடுக்க வந்த மகளை இளநீர் வியாபாரத்திற்காக பயன்படுத்தும் அரிவாளால் தலையில் வெட்டினார். இதனால் படுகாயமடைந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் கருப்பையாவை தேடி வருகின்றனர்.