சமீபத்தில் வெளியான இட்லி கடை திரைப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. குடும்ப பந்தம், சொந்த ஊர் நினைவுகள், பெற்றோரின் மதிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், பார்வையாளர்களின் மனதை நெகிழச் செய்துள்ளது. “இந்த படம் மனதிற்கு நிம்மதி அளிக்கக்கூடியது, நம்ம ஊர் வாசனையோடு கலந்த உணர்வுப்படம்” என்று பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
அதேபோல், இந்தப் படத்தை பார்த்து கண்கலங்கிய வயதான நபரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், “இது கட்டாயம் பார்க்க வேண்டிய படம். அம்மா, அப்பாவுடன் சேர்ந்து பார்க்கவும். வெளிநாட்டு வாழ்க்கை எதுவும் பெரியது இல்லை; பெற்றோர்களுடன் இருப்பதே நிம்மதியான வாழ்க்கை.
View this post on Instagram
“>
அவர்களுடைய உடல்நலம் தான் நமக்கு மிக முக்கியம்” என அழுதபடி உணர்ச்சியுடன் கூறியுள்ளார். அந்த காட்சி பலரின் மனதையும் நெகிழச் செய்துள்ளது. இதனால் இட்லி கடை திரைப்படத்துக்கான ரசிகர் ஆதரவு மேலும் அதிகரித்து, பலரும் “இந்தப் படம் திரையரங்கில் மீண்டும் அனுபவிக்க வேண்டிய படம்” எனக் கூறி வருகின்றனர்.
