மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துவிட்டேன்.

ஜெட்லியின் ‘My Father is a Hero’ என்ற படம் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும். நானும் அவரும் அப்படி ஒரு படம் நடிக்க வேண்டும் என அப்பா ஆசைப்பட்டார். ஆனால் அது நடக்காமலேயே போய்விட்டது என்றார்.