
9-வது டி20 மகளிர் உலகக்கோப்பை போட்டி கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இதன் இறுதிப்போட்டி நேற்றைய இரவு நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் அதிகபட்சமாக அமெலியா கெர் 48 ரன்கள் எடுத்தார். இவர்தான் தொடரின் ஆட்டநாயகி விருந்தினை வென்றார்.
இதைத்தொடர்ந்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களம் இறங்கியது. இறுதியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. இதனால் 32 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. மேலும் வரலாற்றில் முதல் முறையாக நியூசிலாந்து அணி உலக கோப்பையை வென்றுள்ளது. அந்த அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.