
தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வினாடி வினா போட்டி குறித்து அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதல்நிலை போட்டி அந்தந்த மாவட்டங்களில் வருகிற 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 குழுக்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பின்னர் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த குழுக்கல் நடைபெறும் இறுதிப்போட்டி விருதுநகர் மாவட்டத்தில் டிசம்பர் 28ஆம் தேதி நடைபெறும். மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரையில் பரிசு கிடைக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.