
நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் பாமாயில் போன்ற அத்தியாவசியமான பொருள்கள் பல மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த பயன் பெறுகிறார்கள். அதோடு அரசின் பல நல்ல திட்டங்களும் மக்களுக்கு ரேஷன் கார்டுகள் மூலமாக வழங்கப்படுகிறது. இப்படி ரேஷன் கார்டுகள் என்பது பொதுமக்களுக்கு ஒரு முக்கியமான ஆவணமாக திகழ்கிறது. இந்நிலையில் புதுச்சேரியில் சமீபத்தில் முதல்வர் ரங்கசாமி மீண்டும் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்றும் மக்களுக்கு மலிவு விலையில் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி பொதுமக்களுக்கு தீபாவளி பரிசாக நியாய விலை கடைகளில் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி ஆகியவைகள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி வருகிற 21ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் சர்க்கரை மற்றும் அரிசி இலவசமாக மக்களுக்கு விநியோகிக்கப்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளின் உயர்த்தப்பட்ட உதவித்தொகையானது நவம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.