ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கணவன் தன் மனைவியை எலும்பு முறிவு அளவிற்கு மட்டுமே அடித்தால் வெறும் 15 நாட்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற தலிபான்களின் புதிய சட்டத் தொகுப்பு சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் மனித உரிமைக் குழு மூலம் கசிந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தலிபான்களின் இந்த அதிகாரப்பூர்வ உத்தரவில், இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி இந்த விதிகள் பெருமையுடன் பின்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது, மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய கணவனுக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனையும், அதே நேரத்தில் நாய் அல்லது சேவல்களைச் சண்டையிடக் கட்டாயப்படுத்தி மிருகங்களைக் கொடுமைப்படுத்துகிறது இது போன்ற செயலுக்கு ஐந்து மாதங்கள் சிறை தண்டனை.

தலிபான்களின் இந்த கொடூரமான நடவடிக்கையானது பெண்கள் நீதி பெறுவதை முற்றிலும் முடக்கிவிடும் என எச்சரித்துள்ள மனித உரிமை ஆர்வலர் ஒருவர் இங்கு பெண்களை முழுமையாக ஆள ஆண்களுக்கு உரிமை உள்ளது, அவர்கள் சொல்வதே சட்டம்” என வேதனையோடு தெரிவித்துள்ளார்.