டெல்லியில் உள்ள ஔரங்கசீப் சாலை டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியின் முக்கிய பகுதியில் உள்ள ஔரங்கசீப் சாலைக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் என பெயர் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஔரங்கசீப் சாலையை டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சாலை என டெல்லி மாநகராட்சி கவுன்சில் பெயர் மாற்றம் செய்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சாலை என புதிய பெயர் பலகையை டெல்லி மாநகராட்சி நிறுவியுள்ளது