இந்தியாவில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்த போலீஸார் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் அபராத நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும், சில வாகன ஓட்டிகள் அபராதம் விதித்தாலும் திருந்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்த நிலையில், ஹெல்மெட் அணியாமல் பிடிபட்ட இளைஞர் ஒருவர், ஸ்பாட்டிலேயே ஆன்லைனில் ஹெல்மெட் ஆர்டர் செய்து டெலிவரி வாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் அந்த வீடியோவில், போக்குவரத்து போலீஸார் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர் ஒருவரை போலீஸார் தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்க முற்பட்டனர். சற்றும் பதற்றமடையாத அந்த இளைஞர், உடனடியாக தனது செல்போனை எடுத்து ‘பிளிங்கிட்’ (Blinkit) என்ற விரைவு விநியோகச் செயலியில் (Quick-commerce app) ஒரு புதிய ஹெல்மெட்டை ஆர்டர் செய்தார்.
पुलिस सड़क पर चेकिंग कर रही थी एक बाइक राइडर आया जिसके पास हेलमेट नहीं था।
फिर क्या उसने पुलिस से बहस करने के बजाय तुरंत ही “Blinkit” से नया हेलमेट ऑर्डर कर दिया।
हेलमेट की डिलेवरी 15 मिनट हो गई और सारी प्रॉब्लम खत्म— हेलमेट 🪖 आ गया और चालान भी नहीं भरना पड़ा।
वाकई में मानना… pic.twitter.com/BLGuIOjnOy
— Dr. Sheetal yadav (@Sheetal2242) March 16, 2026
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில், அந்த இளைஞர் ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே டெலிவரி ஊழியர் ஹெல்மெட்டுடன் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். போலீஸார் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சாலையோரம் நின்றபடி அந்தப் பெட்டியைப் பிரித்து, புதிய ஹெல்மெட்டை எடுத்து அணிந்துகொண்டார் அந்த இளைஞர்.
இந்தச் சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை என்றாலும், இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “இந்தியர்கள் எப்போதுமே புத்திசாலித்தனமான ஐடியாவைக் கண்டுபிடித்துவிடுவார்கள்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் “அபராதத் தொகையை அரசுக்குக் கொடுப்பதற்குப் பதில், அதே காசில் ஒரு புதிய ஹெல்மெட்டையே வாங்கிவிட்டாரே” என மற்றொருவர் பாராட்டியுள்ளார். இருப்பினும், உயிர்காக்கும் கவசமான ஹெல்மெட்டை அபராதத்திற்குப் பயந்து அணியாமல், சொந்தப் பாதுகாப்பிற்காக எப்போதும் அணிய வேண்டும் என்பதே போக்குவரத்து போலீஸாரின் அறிவுறுத்தலாக உள்ளது.
