தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சிறப்பு விருந்தினரான பிரசாந்த் கிஷோருக்கு நன்றி தெரிவித்து பேச ஆரம்பித்தார். என் நெஞ்சில் குடியிருக்கும் என பேச ஆரம்பித்தபோது அரங்கம் அதிர்ந்தது. இதனையடுத்து விஜய் கூறியதாவது, ஒரு கட்சி ஆலமரமாக வளர வேண்டும் என்றால் அதற்கான அடிப்படை சரியாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் தான் ஒரு புகார் வந்தது. நம்முடைய கட்சியில் எல்லாரும் இளைஞர்களாகவே இருக்கிறார்களாம். இருந்தால் என்ன? அண்ணா கட்சி ஆரம்பித்த போதும் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போதும் அவர்கள் பின்னால் இளைஞர்கள் தான் இருந்தார்கள் என விஜய் கூறியுள்ளார்.

அதே மாதிரி நமது கட்சியில் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் இருக்கிறார்களாம். இருந்தால் என்ன? முன்பெல்லாம் பண்ணையாராக இருந்தவர்கள் தான் பதவியில் இருப்பார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. பதவியேற்பவர்கள் எல்லாம் பண்ணையார் ஆகிவிட்டார்கள். நாடோட நலனை பற்றியோ, வளர்ச்சியை பற்றியோ கவலைப்படாமல் எதற்கெடுத்தாலும் பணம் பணம் என்று தான் இருக்கிறார்கள். அப்படி ஏற்பட்ட மனநிலையில் உள்ள பண்ணையார்களை அரசியல் விட்டு அகற்ற வேண்டும் என கூறியுள்ளார்.