
தமிழகத்தில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகை கூட ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்ட நிலையில் பரிசு பொருள்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து அறிவிப்பை இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.