தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த மாதம் 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்துள்ள நிலையில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் 250 கோடி வசூல் சாதனை புரிந்ததாக படக்குழு அண்மையில் போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்திய நிலையில் தற்போது 300 கோடி வசூல் ஆகியுள்ளதாக டுவிட்டரில் ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகிறது. அதாவது ட்விட்டரில் #varisuHits300crs, #VariauBlockbuster என்ற 2 ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. மேலும் தியேட்டர் வட்டாரங்களிலும் வாரிசு வசூலே  சிறப்பாக இருந்ததாக கூறப்படுகிறது.