மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அதிமுகவில் இணைந்து தீவிரமாக பணிபுரிந்தவர் ஆர்த்தி. இவர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியும் கூட . ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவிலிருந்து விலகிய அவர் அரசியல் பணிகளில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்பாக நேற்று பாஜகவில் இணைந்தார் நடிகை ஆர்த்தி.

கோயம்புத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியின் இணைந்தார். மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் அனல் பறந்து வரும் நிலையில் ஆர்த்தி பாஜக கூட்டணி கட்சியை வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.