பாம்பு என்றால் அனைவருக்குமே ஒரு பயம் இருக்கும். அதிலும் அனகோண்டா என்றால் பதறி அடித்து உயிரை காப்பாற்றிக் கொண்டு ஓட தோன்றும். ஆனால் இங்கு ஒருவர் அனகோண்டாவை பிடித்து அதற்கு முத்தமும் கொடுத்துள்ளார். இது தொடர்பான காணொளியை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ப்ளோரிடா மாகாணம் மியாமி பகுதியை சேர்ந்த உயிரியல் பூங்கா காப்பாளர் மைக் என்பவர் தான் இத்தகைய ஆபத்தான காரியத்தை செய்தது.

விடியோவை காண 

அவ்வப்போது வனவிலங்குகளுடன் எடுக்கும் புகைப்படம் வீடியோக்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிடுவதை இவர் வழக்கமாக வைத்திருந்தார். அவ்வகையில் சமீபத்தில் அனகோண்டாவை பிடித்த காணொளியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தண்ணீருக்குள் சென்று கொண்டிருந்த அனகோண்டாவை பிடித்ததுடன் அதற்கு மைக் முத்தமும் கொடுக்கிறார். இந்த காணொளி வைரலான நிலையில் பலரும் மைக்கின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.