டொமினிக்கன் நாட்டில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டு இருளில் மக்கள் வாழும் நிலை ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் சாலைகள் பாலங்கள் போன்றவை சேதம் அடைந்த நிலையில் 13000 பேர் பாதுகாப்பான இடத்தை தேடி சென்றனர். மீட்புக் குழுவினரும் வெள்ளத்தில் சிக்கிய 2500 பேரை மீட்டுள்ளனர்.

கனமழையால் 2600 பேரின் வீடுகள் சேதம் அடைந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நெடுஞ்சாலை சுரங்க பகுதியில் இருந்த சுவர் இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்தது சேர்த்து இதுவரை 21 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மீட்பு குழுவினர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.