பிரபல நடிகை சூஸன் ஷெப்பர்ட் (89) மறைவு செய்தியால் ஹாலிவுட் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குட் ஃபெல்லாஸ், அங்கிள் பக் உள்பட பல படங்களில் நடித்த சூஸன், HBO சேனலில் ஒளிபரப்பான ‘தி சோப்ரனோஸ்’ தொடரால் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்துவந்த சூஸன் இறந்துவிட்டதாக அவரது பேத்தி இசபெல் கூறியதை தொடர்ந்து ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்