பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தன்வீர் அகமது. இவர் தற்போது இந்திய அணியை மிகவும் ஏளனமாக விமர்சித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்திய அணியில் வெற்றிக்கு விராட் கோலி, ரோகித் சர்மா, மற்றும் பும்ரா ஆகியோர்கள் தான் முக்கிய காரணம். இவர்கள் அனைவரும் இந்திய அணியில் இல்லாத பட்சத்தில் எதிர்காலத்தில் இந்தியாவை எளிதாக பாகிஸ்தான் அணி வீழ்த்திவிடும். இந்திய அணிக்கு இலங்கை நிலை நிச்சயம் ஏற்படும்.‌ அவர் தற்போது இந்திய அணியில் பந்து வீச்சு நன்றாக இருந்தாலும் பேட்டிங்கை பொருத்தவரை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இவர்கள் தான் சிறப்பாக இருக்கிறார்கள்.

மற்றபடி பேட்டிங்கில் எந்த வீரரும் சிறப்பாக இல்லாததால் அவர்களால் நிச்சயம் இந்திய அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாது. எனவே பாகிஸ்தான் அணியை விமர்சிப்பதற்கு முன்னால் உங்கள் நிலைமை எப்படி இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள் என்று மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார். மேலும் இந்திய அணி இலங்கைக்கு எதிரான போட்டியில் டி20 தொடரில் வெற்றி பெற்ற நிலையில் ஒருநாள் தொடரில் தோல்வியை சந்தித்தது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.