நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் குறித்தும், திமுக-வின் தோல்விக்கான பின்னணி குறித்தும் அக்கட்சியின் மூத்த அமைச்சர் கே.என். நேரு மேடையில் மிகவும் எமோஷனலாகப் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஒன்பதாம் தேதியே தேர்தல் மட்டும் நடந்திருந்தால் நிச்சயமாக திமுகதான் மீண்டும் ஆளுங்கட்சியாக வந்திருக்கும் என்றும், ஆனால் கடைசி 15 நாட்களுக்குள் வீசிய ஒரு மாபெரும் அலையால், கடைசி 3 நாட்களில் ஒட்டுமொத்த களம் தலைகீழாக மாறிவிட்டதாகவும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

​மேலும், இந்த அலை காரணமாகவே திமுக நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்ததாகக் குறிப்பிட்ட நேரு, தற்போதைய தமிழக அரசியல் களம் மொத்தமாக மாறிவிட்டதாகக் கூறியுள்ளார். ஒரு காலத்தில் திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும்தான் போட்டி என்ற நிலை இருந்ததாகவும், ஆனால் இன்று அதிமுக-வை ஓரங்கட்டிவிட்டு, ஆளுங்கட்சியான தவெக-வுக்கும் திமுகவுக்கும்தான் நேரடிப் போட்டி என்ற புதிய அரசியல் நிலைமை உருவாகிவிட்டதாகவும் அவர் ஓப்பனாகப் போட்டுடைத்துள்ளார்.