கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன் என நடிகை டாப்ஸி கூறியுள்ளார்.

டாப்ஸி இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார்.   இவர்  ஆடுகளம், வந்தான், வென்றான் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது இந்தத் தொடர்களில் பிசியாக இருக்கிறார். இவர் டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மதியாஸ் போவை காதலித்து வருகிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவருடன் ஜாலியாக வெளியே சுற்றுகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், “கவர்ச்சி என்பது நான் உடுத்தும் உடையில் இல்லை. மாறாக எனது குணத்தில் இருக்கிறது. நான் கவர்ச்சி படத்தில் நடித்தால், அது சாதாரண படமாக இருக்கக் கூடாது. என் ரசிகர்களுக்கும் அது புது அனுபவத்தை கொடுக்கும். என் வாழ்நாளெல்லாம் நான் பிட்னஸ் உடன் இருக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்