
ஒடிஷாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்றது. இதில் பாஜக வெற்றியை அடைந்தது. நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியானது பாஜகவிடம் பெரும் தோல்வியை சந்தித்தது. அதன் எதிரொலியாக அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களை கூண்டோடு மாற்ற அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஒடிஷாவில்கடந்த 24 வருடங்களாகவே ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம் கட்சியானது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியிலும் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.