தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரம் ஆக அறிமுகமாகி அதன் பின் முன்னணி ஹீரோவாக உயர்ந்தவர் சிம்பு. உடல் எடை அதிகரித்து படங்களில் நடிக்காமல் இருந்த சிம்பு மாநாடு என்ற திரைப்படத்தின் மூலம் மாபெரும் கம்பேக் கொடுத்தார். அதன்பிறகு சிம்பு நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சிம்பு தற்போது சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் கிருஷ்ணா சமீபத்திய பேட்டியில்நடிகர் சிம்புவால் தனக்கு ஏற்பட்ட வருத்தம் குறித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது, ஒரு படத்திற்கான மிகப்பெரிய ப்ரொமோஷனே அந்த படத்தில் இருக்கும் நடிகரின் லுக் தான். ஆனால் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் கிளைமாக்ஸ் சீனில் நடிகர் சிம்பு பத்து  தல படத்தின் கெட்டப்பில் இருந்தார். இது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இருப்பினும் நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் ஆகியோர் எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்பதால் என்னால் அவர்களிடம் எதுவுமே சொல்ல முடியவில்லை என்று கூறினார். மேலும் பத்து தல திரைப்படம் மார்ச் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.