தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு விவகாரம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தின் கந்தர்வகோட்டை தொகுதியைத் தங்களுக்குத்தான் ஒதுக்க வேண்டும் என அதிமுக தலைமை இப்போது ஒற்றைக்காலில் நின்று பிடிவாதம் காட்டி வருகிறது.

ஏற்கனவே பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இந்தத் தொகுதியைத் திரும்பப் பெற அதிமுக கடும் முயற்சி எடுத்து வருவதால், கூட்டணிக் கணக்குகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. “எங்களுக்கு அந்த ஏரியா செட் ஆகும் பாஸ்… வேற எதாவது எடுத்துக்கோங்க!” என அதிமுக தரப்பு காய் நகர்த்தி வருவதாகத் தகவல் கசிந்துள்ளது.

​கந்தர்வகோட்டைக்கு பதிலாக திட்டக்குடி அல்லது திருச்சுழி ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை பாஜக எடுத்துக்கொள்ளுமாறு அதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு ‘வெயிட்’டான தொகுதியைப் பெற பாஜக மேலிடம் கறாராகப் பேசி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், “என்னப்பா இது… சீட் பிடிக்கிறதுக்கே இவ்வளவு பெரிய போராட்டமா இருக்கே!” என சமூக வலைதளங்களில் கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர். அண்ணாமலைக்காக பாஜக கேட்கும் அந்தத் தொகுதி எது என்பதும், கந்தர்வகோட்டை யாருக்கு என்பதும் இன்னும் சில நாட்களில் ‘கிளிக்’ ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.