பா.ரஞ்சித் தயாரிப்பில் சோமசுந்தரம் ஹீரோவாக நடித்த திரைப்படம் பாட்டில் ராதா. இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் எல்லை மீறி பேசி சர்ச்சையில் சிக்கினார். அவருக்கு திரை துறையில் இருப்பவர்களும் நெட்டிசன்களும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இன்று சென்னையில் நடந்த பேட் கேர்ள் பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மிஸ்கின் தனது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தவர்களின் பெயர்களை குறிப்பிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். நான் நகைச்சுவையாக தான் பேசினேன்.

அதில் ஓரிரு வார்த்தைகள் எல்லை மீறி சென்றுவிட்டது. குறிப்பிட்ட ஒரு மனிதரை நான் விமர்சிக்கவில்லை. அந்த எண்ணமும் எனக்கு இல்லை. மேடையில் பேசுவதற்கு நாகரிகம் வேண்டும் என்கிறார்கள். அது அரசியல் மேடை கிடையாது. கூத்து செய்யும் கலைஞர்கள் மேடை. கிராமத்து கூத்தில் சில வார்த்தைகளை நா கூசும் அளவிற்கு பேசுவார்கள் அது ஒரு விதமான வெளிப்பாடு. அது ஒரு வகையான நகைச்சுவை. அப்படித்தான் நானும் பேசினேன். யாரையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை என கூறியுள்ளார்.