
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அதனை அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுதீன் ரஷ்வி என்பவர் விமர்சித்திருந்தார். அதாவது விஜய் நடத்திய நோன்பு நிகழ்ச்சியில் குடிகாரர்களும் ரவுடிகளும் தான் கலந்து கொண்டனர் என்றும் அவர் இஸ்லாமியர்களை அவமானப்படுத்திவிட்டார் என்றும் அவர் கூறியதோடு இனி முஸ்லிம்கள் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் விஜயை அழைக்க க்கூடாது என்று கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடும் கண்டனம் தெரிவித்தது.
அதாவது திமுகவின் கைக்கூலியாகவும் கருப்பாடாகவும் ரஷ்வி செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதோடு முஸ்லிம்களை ரவுடிகள் என்றும் குடிகாரர்கள் என்றும் சொன்னதற்கு கடும் கண்டன்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டிருந்தது. அதோடு விஜய் வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பது இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றதால் இதனை திமுக பொறுத்துக் கொள்ள முடியாமல் இது போன்ற கூலி ஆட்களை கருப்பாடுகளை ஒப்பந்தம் செய்து விஜயை விமர்சிக்கறது என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிர்வாகியை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தற்போது இதைப்பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, திமுக தலைமையில் உள்ள மத சார்பற்ற கூட்டணியில் உள்ள இஸ்லாமியர்களின் ஓட்டை பிரிப்பதற்காக அவர்கள் கையாள்கிற ஒரே யுத்தி இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் ஓட்டுகளை சிதற வைப்பது மட்டும்தான். இவர்களின் ஓட்டை பிரிப்பதற்காக தான் தற்போது ஒரு புதிய கட்சி உதயமாகி இருக்கிறது என்றும் அவர் கூறினார். மேலும் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதற்காகத்தான் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போன்று விஜய் நாடகமாடுவதாக திருமாவளவன் மறைமுகமாக சாடியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் வாக்குகள் மட்டுமல்ல 80% ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளும் 2026 தேர்தலில் தவெகவிற்கே விழும் @thirumaofficial
நீங்கள் மற்றும் உங்கள் நிர்வாகிகள் மட்டுமே திமுகவோடு இருக்கிறீர்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் அல்ல. 2026 தேர்தல் இதை உங்களுக்கு உணர்த்தும் ! pic.twitter.com/v4Z7wUQTVC
— Nanban (@YourNanban) April 16, 2025