தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த விஜய், கரூர் நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு அந்த பயணத்தை சில வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.
ஆனால் இதற்கு முன் அவர் சில மாவட்டங்களில் பேசிய உரைகள் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றன. அதில் ஒன்றில், “உங்கள் தந்தையின் பேனாவை கடற்கரையில் வைக்கப் போகிறீர்களா? எல்லாவற்றிற்கும் உங்கள் அப்பாவின் பெயர் வைக்கிறீர்கள்” என விஜய் பேசும் விடியோவை விமர்சனம் செய்யும் வகையில் ,
பல ஆண்டுகளுக்கு முன்பு திமுக தரப்பில் நடந்த ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய், “சென்னையில் ஒரு பகுதிக்கு கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயர் வைக்கப்படவிருக்கிறது என்று கேள்விப்பட்டேன். அவரின் பெயர் வைப்பது மட்டும் போதாது, அவருடைய சிலையையும் அங்கே வைப்பது தான் பொருத்தமானது” என உணர்ச்சியுடன் பேசிய வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
what bro @TVKVijayHQ 😂 !! pic.twitter.com/1ZWq0gr7Cd
— நாஞ்சில் சிபி (@cebi_sweety) October 11, 2025
“>
இதை பார்த்த நெட்டிசன்கள், “அப்போ ஆதரவு, இப்போ எதிர்ப்பு – அது வேற வாய், இது நாற வாய்” என கூறி சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
