
கேரளா திருச்சூரில் ஹோட்டல் ஒன்றில் சுமார் 178 பேர் கடந்த 25 ஆம் தேதியன்று குழிமந்தி என்ற பிரியாணியை சாப்பிட்டுள்ளனர். அதற்கு கொடுக்கப்பட்ட மயோனைஸ் கலந்து சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து உணவு சாப்பிட்ட அனைவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
பின்னர் உணவு சாப்பிட்ட வாடிக்கையாளர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுளர்கள். இந்நிலையில் குடிலக்கடவைச் சேர்ந்த உசைபா என்ற 56 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்ட அவர் நேற்று உயிரிழந்துள்ளார். மயோனைஸ் தான் உணவில் விஷம் பரவ கரணம் என தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.