பிஹாரில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் கடந்த 9 நாட்களில் அடுத்தடுத்து 4 பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது.   அதாவது கடந்த 15 நாள்களில் 6 பாலங்கள் இடிந்த நிலையில், நேற்று  மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது.

சிவான் மாவட்டத்தில் கண்டகி ஆற்றில் கட்டப்பட்டிருந்த அந்த பாலம், கனமழை காரணமாக இடிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழுவதற்கு அம்மாநில எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்