
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் அதுதான் மாநிலத்தைச் சேர்ந்த ஷகீனா பேகம் என்பவர். வேலை பார்த்து வருகிறார். இவர் தனது சொந்த மாநிலத்தைச் சேர்ந்த சுமன் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். சுமனும் சென்னையில் தான் வேலை பார்த்துள்ளார். இந்த நிலையில் சுமன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தகள் கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் ஷகீனா கர்ப்பமானார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் சுமனிடம் அடிக்கடி கூறியுள்ளார். ஆனால் சுமன் காலம் தாழ்த்தினார்.
கடந்த இரண்டு மாதமாக சுமன் தனது காதலியுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். மேலும் திடீரென அவர் காணாமல் போய்விட்டார். அவர் தமிழகத்தை விட்டு மீண்டும் அசாமிற்கு சென்றிருக்கலாம் என நினைத்து ஷகீனா பேகமும் கம்பெனியிலிருந்து விடுப்பு எடுத்து சுமனை தேடி அசாமிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கும் அவர் இல்லை. இதனால் ஷகீனா பேகம் மீண்டும் தமிழகத்திற்கு வந்து பெண்கள் விடுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் ஷகீனா பேகம் வேலைக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்துள்ளார். அப்போது மாலையில் அவருக்கு பிரசவ வலி வந்தது.
சிறிது நேரத்தில் அவர் அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை விடுதியின் பின்னால் உள்ள குளத்தில் தூக்கி வீசிவிட்டு தனது தோழிகள் விடுதிக்கு வந்ததும் நடந்த விஷயத்தை கூறியுள்ளார். அவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் மூச்சு திணறி குழந்தை உயிரிழந்தது. குழந்தையையும் ஷகீனா பேகத்தையும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஷகீனா பேகத்தை ஏமாற்றி சென்ற அவரது காதலன் சுமனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.