
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கவரப்பேட்டை அருகே குருவராஜ கண்டிகை கிராமத்தில் ஹரி கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுலு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதுடைய வெங்கட லட்சுமி என்ற குழந்தை இருந்துள்ளது. நேற்று அமுலு தனது குழந்தைக்கு டீயுடன் பிஸ்கட் சேர்த்து ஊட்டியுள்ளார்.
அப்போது திடீரென புரையேறி குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை செங்குன்றம் அருகே இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே விழுந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.