உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகரில், பாஜக மாவட்ட துணைத்தலைவர் கவுரி சங்கர் அக்ரஹாரி மீது ஆபாச குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவருடன் தொடர்புடைய ஆபாச வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், குற்றம் சாட்டப்பட்ட தலைவர் மிகவும் வெட்கக்கேடான செயலில் ஈடுபடுகிறார் என்றும், அந்த செயலை ஒரு மூன்றாவது நபர் கேமராவில் பதிவு செய்கிறார் என்றும் கூறப்படுகிறது. குற்றச்சாட்டின் தீவிரம் அதிகரிக்கும் வகையில், வீடியோவில் காணப்படும் சிறுமி ஒரு மைனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக, மாநில பாஜக பொதுச் செயலாளர் கோவிந்த் நாராயண் சுக்லா வெளியிட்ட உத்தரவை தொடர்ந்து, கவுரி சங்கர் அக்ரஹாரி பாஜகவிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் ஒழுக்கத்தை நிலைநாட்டும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
Breaking:– यूपी के जिला सिद्धार्थनगर में BJP के जिला उपाध्यक्ष गौरीशंकर अग्रहरि का घिनौना Video वायरल हुआ जिसमें गौरीशंकर अग्रहरि एक नाबालिग लड़की के साथ गलत काम करता दिख रहा है।
🔺BJP ने गौरीशंकर को पार्टी से निकाला।@BJP4UP @Uppolice pic.twitter.com/fKLzbMP3tq
— IBA NEWS 🆇 (@IBANEWSofficial) September 15, 2025
“>
இந்த விவகாரம் பெரும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சமாஜ்வாதி கட்சி தனது சமூக ஊடகத்தில் வீடியோவைப் பகிர்ந்து, “பாஜக தலைவர்களிடமிருந்து சிறுமிகளை காப்பாற்றுங்கள்!” எனக் கடுமையாக தாக்கியுள்ளது. பாஜகவின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், சம்பவத்தைக் கருத்தில் கொண்டு போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், சிறுமியின் வயதின் உறுதியான ஆவணங்கள் சேகரிக்கப்படுவதோடு, பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலமும் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுமி மைனர் என நிரூபிக்கப்பட்டால், பாஜக முன்னாள் தலைவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
