தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் மொத்த 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் களம் காண்கிறார். தற்போது தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் விஜய் ஜனநாயகன்‌ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது நடிகர் விஜயின் கடைசி படமாக இருக்கும் நிலையில் அரசியல் கதையில் படம் உருவாகிறது.

இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்த பிறகு முழுமையாக அரசியலில் மட்டுமே விஜய் ஈடுபடுகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் தலைமையில் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 4 நாட்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்கிறார்கள். அதன்படி நாளை முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் நிர்வாகிகள் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளிடம் விஜய் நேர்காணல் நடத்த இருக்கிறார். மேலும் 2026 தேர்தலில் களம் காணும் விஜய் தற்போது கட்சியை பலப்படுத்தி முக்கிய நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.