32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்துள்ளது தமிழ்நாடு அரசு.

32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி ஆக பதவி உயர்வு அளித்துள்ளது தமிழ்நாடு அரசு. இதில் தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு புதிய எஸ். பி. க்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யாக தீபக் ஷிவாக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.யாக சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட எஸ்பியாக எஸ் செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக பெரோஸ் கான் அப்துல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை எஸ்.பி சிவபிரசாத் தேனி எஸ்.பி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் எஸ்பி தங்கதுரை கிருஷ்ணகிரி எஸ்பி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேனி எஸ்.பி டோங்க ரே பிரவீன் ரமேஷ் மதுரை எஸ்.பி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டிஐஜி சாமுண்டீஸ்வரிக்கு ஐஜியாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜேஸ்வரி டிஐஜிக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஐஜி தமிழ்சந்திரனுக்கு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்த தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. டிஐஜி லட்சுமிக்கு ஆயுதப்படை ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர் சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் சென்னை பரங்கிமலை காவல்துறை ஆணையர் தீபக் விழுப்புரம் எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் எஸ்பி ஷஷாங்க் சாய் சென்னை கியூ பிரிவு சிஐடி எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை வடக்கு துணை ஆணையர் ஜி. சந்தீஸ் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி ஆக  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை நடவடிக்கை பிரிவு ஐஜியாக ஜெயஸ்ரீ நியமனம் செய்யப்பட்டுள்ளார் தேனி மாவட்டத்திற்கு எஸ்பியாக ஆர் சிவப்பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார் சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பியாக ஸ்னேகா பிரியாவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை போக்குவரத்து சாலை பாதுகாப்பு பிரிவு ஐஜியாக எஸ். மல்லிகா ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பி. தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை அமலாக்க பிரிவு ஐஜியாக என் எம் மயில்வாகனன், வேலூர் சரக டிஐஜி யாக சரோஜ் குமார் தாக்கூர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு காவல் பயிற்சி கல்லூரியின் கூடுதல் இயக்குனராக எம்.எஸ் முத்துசாமி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பியாக சசி மோகனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எஸ்.பி. ஆக ஆர் ராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து காவல் துணை ஆணையராக பண்டி கங்காதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் எஸ்.பி ஆக மேகலினா ஐடன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை நகர் வடக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக ஜி.எஸ் அனிதா நியமனம் செய்யப்பட்டுள்ளார் சென்னை மத்திய மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக எம். கிங்ஸ்லின் நியமனம் செய்யப்பட்டுள்ளார் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு டிஐஜி யாக டி. ஆர் வெண்மதி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆவடி தலைமையகம் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக எஸ். ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி திருநாவுக்கரசுக்கு டிஐஜி யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு பெற்ற திருநாவுக்கரசு உளவுத்துறை பாதுகாப்பு டிஐஜி யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி யாக ஆர் ஜெயந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை வடக்கு போக்குவரத்து காவல் இணை ஆணையராக தேவராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து காவல் இணை ஆணையராக டி. மகேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக ராதிகாவை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. சென்னை ரயில்வே போலீஸ் டிஐஜி யாக ஜி.ராமரை நியமனம் செய்துள்ளது.