தமிழக பாஜகவில் ஆடியோ, வீடியோ விவகாரத்தில் கடந்த ஒரு மாதமாகவே பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. பொறுப்பாளர்கள் இடைக்கால நீக்கம் போன்ற பல நடவடிக்கைகளை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்தார். இதில் தொடர்ச்சியாக அதிருப்தியில் இருந்த பலர் மாற்றுக் கட்சியில் சேர்ந்து வருகிறார்கள். பல அரசியலில் இருந்து விலகி வருகிறார்கள்.

அந்த வகையில் பாஜக கட்சியின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில வளர்ச்சி தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் பாஜக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அண்ணாமலை அவரை ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்தார். இருப்பினும் காயத்ரி ரகுராம் கட்சிக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்தார். ஆனால் அண்ணாமலையை விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் காயத்ரி ரகுராம் பாஜக கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இது தமிழக பாஜகவில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.