கோவை மாவட்ட அதிமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம், அமைச்சர் கே.ஏ.எஸ் முன்னிலையில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியில் அதிரடியாக இணைந்துள்ளார். இவர் கடந்த 2016 முதல் 2021 வரை கிணத்துக்கடவு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

​இவருடன் மதுக்கரை மற்றும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளான பாலு, கதிர்வேல் உள்ளிட்டோரும் தவெகவில் இணைந்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளில் இருந்தும் அடுத்தடுத்து பல முக்கியப் புள்ளிகள் தவெகவுக்குத் தாவி வருவது, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.