தமிழகத்தில் அதிமுகவின் உச்சபட்ச அதிகாரம் உள்ள பதவியாக பொதுச் செயலாளர் பதவி இருந்தது. அது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்குவதற்கு இபிஎஸ் முயற்சி செய்து வருகிறார். ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் பொதுச்செயலாளர் பதவிக்கு நேற்று இ பி எஸ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து பொதுச்செயலாளராக இபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் எனவும் கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் ஓபிஎஸ் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் அந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக இருந்தவர்கள் விவரங்களை பார்ப்போம்.

எம்ஜிஆர் – (1972-78), (1986-87)
நெடுஞ்செழியன்- (1978-80)
சண்முகம்- (1980-1985)
ராகவாநந்தம் – (1985-86)
ஜெயலலிதா- (1989-2016)
சசிகலா- (2016-17)