ஒரே கூட்டணிக்குள் இருந்தாலும் அதிமுக மற்றும் பாஜக இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்துக் கொண்டுதான் வருகிறது. கொங்கு மண்டலத்தில் கோலோச்சுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது. அதனை மேலும் வலுப்படுத்தக் கூடிய வகையில் சமீப காலமாக பாஜக முக்கிய நிர்வாகிகள் பலரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்து எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். அதிமுக மற்றும் பாஜக இடையே பிரச்சனை மேலும் வலுவடைந்துள்ளது.

இந்நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் எந்த வெரிசலும் இல்லை என்று தமிழ்நாட்டிற்கான பாஜகவின் தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறியுள்ளார். சமீபகாலமாக பாஜகவில் இருந்து பலரும் விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைமையே முடிவு செய்யும் என்ற சுதாகர் ரெட்டி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.